கோவை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்; ரயில்வே அறிவிப்பு

Advertisement
கோவை: கோவை-தன்பாத் இடையே நாளை இயக்கப்படும் ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து தன்பாத் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03680) வரும் ஜூன் 24ம் தேதி ம் காலை 7.50 மணிக்கு புறப்படவிருந்தது.

ஆனால், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக, இந்த ரயில் அன்றைய நாளில் மாலை 4.15 மணிக்கு (16.15 மணி) புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் மொத்தம் 8 மணி 25 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் நோக்கிச் செல்லும். பயணிகள் முன்னதாகவே தகவல் அறிந்து பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video