All Appas are Liars- கோவையில் இயக்குநர் ராம் சுவாரஸ்யம்!!!

கோவை: கோவையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது…

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் கண்டுகளித்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பார்வையாளர்களிடம் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடி படம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராம், இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்ததாகவும் அதேபோல் பல்வேறு இடங்களில்
அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்.

இந்த படம் குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்வும் பெற்றோர்களுக்கு தான் என கூறினார்.
All Appas Are Liars குட்டி குட்டி பொய் சொல்ல கூடிய அப்பாக்கள், குடும்பத்திற்காக பர்சில் உள்ள பணத்திற்கு ஏற்ப பொய் சொல்ல கூடிய அப்பாக்கள் அதே சமயம் Daddy எல்லோரும் பாவம் என்றார். இது குறித்து நான் சிறுவர்களிடம் கேட்டபோது கூட அப்பாக்கள் தான் பொய் கூறுகிறார்கள் அம்மாக்கள் பொய் கூறவில்லை என்றார்கள் என தெரிவித்தார்.

நா.முத்துக்குமாரை அனைவரும் மிஸ் செய்கிறோம் என்றும்
ஜூலை 19ம் தேதி நா.முத்துகுமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடத்துகிறோம் என்றார் அந்த விழா அவரின் புகழை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் என தெரிவித்தார்.

மலை ஏறினால் மகத்தான விஷயங்கள் கிடைக்கும் என்றார். நடிகை அஞ்சலி எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர் இந்த படத்திலும் நடத்துள்ளார் என்றார். Realistic படங்களை மக்கள் ரசிக்கிறார்கள்
மக்கள் பிரமாண்டம் என அனைத்தையும் விரும்புவார்கள் என்றார். மேலும் மக்கள் சுவாரஸ்யம் நிறைந்தது கவலைகளை மறப்பது போன்ற படங்களை ஏற்று கொள்கிறார்கள் என்றார்.

உச்சபட்ச நடிகர்கள் அழைத்தால் படம் செய்வேன், ஆர்வம் உள்ளது என்றார்.
மேலும் Box office கண்டிப்பாக வேண்டும் Hotstar பணம் கொடுத்தார்கள் நான் எடுத்தேன் என தெரிவித்தார்.
நடிகர்கள் போதை பொருட்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
பெற்றோர்கள் அவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குடும்பஸ்தன் பட இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை பார்த்து
அனைவரும் மகிழ்ந்தார்கள் என்றும்
குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம் என்றார். குழந்தைகளை வைத்து எடுக்கின்ற படங்கள் அனைத்தும் ஹாலிவுட்டையும் கலக்குகிறது என்றார். படத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக மக்கள் இப்படத்தில் நடித்த சிறுவனை பற்றி பேசுவார்கள் என கூறினார்.
Movie Review பற்றிய கேள்விக்கு எங்கள் படத்திற்கு அவர்கள் தான் சப்போர்ட்டாக இருந்தார்கள் என்றும் அதே இந்த படத்திற்கும் தந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

பின்னர் பேசிய எழுத்தாளர் பாமரன் இந்த படத்தில் ராமுக்குள் இருந்த இன்னொரு ராமை பார்த்தேன் என்றார். இப்போதெல்லாம்
குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள் ஆனால் 2 கதைகளை கூற குழந்தைக்கு கூறுவதில்லை என சாடினார். இந்த படம் வாழ தவறிய வாழ்க்கை கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி என அனைத்தையும் இந்த படம் உணர்த்தும் என்றார்.
மேலும் நடிகர் சிவா என்றாலே காமெடி நடிகன் என்று முத்திரை குத்தப்பட்டிருந்ததை ராம் மாற்றி உள்ளார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp