கோவை: ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்களுக்கு ஒரு நாள் அனுமதி இல்லை என்று ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை ஈஷா யோகா மையத்திற்கு தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர்.
ஆதியோகி
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 1ம் தேதி ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இடையூறுகளுக்கு வருந்துகிறோம்.
மேலும் ஜூலை 2 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Maintenance work at Adiyogi, Dhyanalinga; Devotees will not be allowed for one day! Isha administration announces