ஜூலை 2ம் தேதி: பொள்ளாச்சி மின்தடை | Power shutdown in Pollachi

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஜூலை 2ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் ஜூலை 2ம் தேதி பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற் பொறியாளர் இரா.தேவானந்த் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஆனைமலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 2.7.2025ம் நாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

ஆனைமலை துணை மின்நிலையம்:-

ஆனைமலை, வே.புதூர், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம, கிழவன்புதூர். பெரியபோது. மாரப்பகவுண்டன்புதூர், சின்னப்பம்பாளையம்,

செம்மேடு, காந்தி ஆசிரமம், M.G.R புதுார், அம்மன் நகர், OPS நகர் மற்றும் தாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அந்நாளில் மின் பாதைகளின் அருகில் உள்ள மற்றும் அருகில் உள்ள உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவிர்க்க இயலாத காரணத்தால் மின் நிறுத்தம் செய்வது ஒத்திவைக்க நேர்ந்தால் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்கூறிய இடங்களுடன், மேலும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.

இந்த செய்தியை ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுவீர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp