கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் ரகசியத் தகவல் தெரிவிக்கலாம் என்று காவல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பவர்கள் மற்றும் செங்கல் சூளை நடத்துபவர்களை போலீசார் பிடித்து வருகின்றனர்.
இதனிடையே சட்டவிரோத மண் அகழ்வு வழக்குகளைக் கையாளும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் மற்றும் செங்கல் சூளைகளை நடத்தி வரும் நபர்களைப் பற்றிய விவரங்களை, கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் பின்புறம் உப்பிலிபாளையத்தில் செயல்பட்டு வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தில், நேரிலோ, கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் (9487006571) மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கூறுபவரின் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு சிறப்புப் புலனாய்வு குழுவினர் அறிவித்துள்ளனர்.