கோவை: மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்விையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம். மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட மைலேறிபாளையம், சீராப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ஜீவானந்தம். உதவி செயல் பொறியாளர் கருப்பசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, உட்பட பலர் உடன் இருந்தனர்.
வெள்ளலூரில் நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி கட்டிட வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுக்கரை ஒன்றியம் சீராப்பாளையம் ஊராட்சியில் சேலம் கொச்சின் சாலையிலிருந்து மச்சாபாளையம் செல்லும் வழியில் ரூ.37 இலட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலைப்பணிகளை தரமானதாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்
அதனைத்தொடர்ந்து, மயிலேறிபாளையம் ஊராட்சியில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றினை ரூ.40 ஆயிரம் செலவில் நீர் சேகரிப்பு மையமாக
மாற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கேள்விகளை கேட்டு மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தார். மேலும் அப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளதை மாணவர்களிடம் காண்பித்து மாணவர்களுக்கு அது தொடர்பான விளக்கங்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மயிலேறிபாளையம் குட்டை பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒத்தக்கால்மண்டபம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம்இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.