Power Cut Coimbatore: சூலூர், நீலாம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூலை 7ம் தேதி) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் முத்துக் கவுண்டன்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 7ம் தேதி) மின் விநியோகத்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையம்
Power Cut Coimbatore
சூலூர் (ஒரு பகுதி), நீலாம்பூர் (ஒரு பகுதி), தொழிற்சாலை பகுதி (Industrial Area), லட்சுமி நகர், குளத்தூர் மற்றும் முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை காலத்தில் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Top 6 Tourist Spots in Coimbatore
