கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கவுன்சிலிங் மற்றும் கல்லூரி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பொறியியல் அல்லாத படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணை அறிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உள் ஒதுக்கீட்டு உரிமை கொண்டவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி நடத்தப்படும்.
7.5 சதவீத உள் உரிமை மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 9 முதல் 15 வரை நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
7.5 சதவீத மாணவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 19ம் தேதியும், பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 21 முதல் 26 வரையும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு (7.5% உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு) ஜூலை 29 அன்றும், பொதுப் பிரிவுக்கானது ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரையும் நடைபெறும்.
மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 6 அன்றும், பொதுப் பிரிவிற்கு ஆகஸ்ட் 8 முதல் 11 வரையும் நடைபெறும்.
நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 13ம் தேதியும், பொதுப் பிரிவிற்கு ஆகஸ்ட் 19 முதல் 21 வரையும் நடைபெறுகிறது.
துணைத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, அவர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்.
மாணவர்களுக்கான கல்லூரி துவக்கம் மற்றும் ஓரியண்டேஷன் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

வழிமுறை வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இயலாத மாணவர்களுக்கு, நேரடி சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கும்.
இந்த அட்டவணை, அரசு வழிகாட்டல்களைப் பொருத்து மாற்றப்படலாம். இவ்வாறு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.