கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், தளிமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி, பெண் குழந்தை உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வாடகைக்கு ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் தனது 9 வயது மதிக்கத்தக்க மகளை கற்பழித்து விடுவதாக மிரட்டுவதாக ஆதங்கத்தை தெரிவித்து. கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்று உள்ளார்.
மேலும் தனது மகளுக்கு மிரட்டல் விடுத்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் அவர் உடலில் டீசலை ஊற்றி கொள்ளும் போதே அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
முருகன் அவரது மனைவி மற்றும் அவரது பெண் குழந்தையை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.