கோவை: சங்கத்தின் பத்திரங்களை திருடிச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கில், கோவை எல்.பி.எப்., நிர்வாகிகள் 4 பேர் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்.பி.எப் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பொதுச் செயலாளராக பார்த்தசாரதி, தலைவராக பாண்டியன், துணை பொது செயலாளர் சிவக்குமாரன், செயலாளராக ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களை பணி செய்யவிடாமல் பழைய நிர்வாகிகள் தடுத்ததுடன், சங்கத்தின் சொத்து பத்திரங்களை திருடி சென்றதாக சங்கத்தின் முன்னாள் நிர்வாகி துரைசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் எல்.பி.எப்., தொழிற்சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, பாண்டியன், சிவக்குமரன், ராமசாமி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக நேற்று நீதிபதி அப்துல் ரகுமான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக எல்பிஎப் தொழிற்சங்கம் சார்பில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் அருள்மொழி ஆஜராகினார்.