கோவை: Flipkart நிறுவனத்திற்குச் சொந்தமாக கோவையில் அமைந்துள்ள குடோனில் மூட்டை மூட்டாய் கெட்டுப்போன பேரீச்சை பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
Flipkart நிறுவனத்திற்குச் சொந்தமாக கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து கோவை முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனிடையே இந்த கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் தரமாக உள்ளதா? பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பேரீச்சம் பழத்தை அழிக்கும் வீடியோ காட்சிகள்
அப்போது கிடங்கில் கெட்டுப்போன பேரீச்சம் பழங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, 278 கிலோ கெட்டுப்போன பேரீச்சம் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவற்றை குப்பையில் கொட்டி அழித்தனர். கோவையில் இதேபோன்று 37 உணவு கிடங்குகளில் சோதனை மேற்கொண்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.