கோவை: கோவை மாநகரில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
கோவை மாநகர போலீஸ் தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் உதயகுமார். இவர் சென்னை அண்ணா நகர் உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக கோவை தெற்கு துணை கமிஷனராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கார்த்திகேயன் சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவின், எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்தார்.
அவர் இன்று கோவை மாநகர போலீஸ் தெற்கு துணை கமிஷனராக பொறுப்பேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், “கோவை தெற்கு பகுதியில் போதை பொருள் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், ” என்றார்.