கோவை: மூன்று மதத்தினர் முன்னிலையில் மத நல்லிணக்க திருமணம் சீர்வரிசை வழங்கி நடைபெற்றது.
கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றம் சார்பில் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆறு இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் திருச்சி,திருப்பூர்,கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு மத நல்லிணக்க முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கோவை மாவட்ட அரசு தலைமை காஜி மௌலவி அப்துல் ரஹீம் இம்தாதி ஹஜ்ரத்,சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமி,ஆலாந்துறை நாதே கவுண்டர் புதூர்,கொங்கு காசி அஷ்ட பைரவர் திருக்கோயில் பைரவர் மற்றும் சர்ச் பாதிரியர்கள் தலைமையில் மத நல்லிணக்கம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்த மணமக்களுக்கு 16 கிராம் தங்கம்,ஸ்டீல் பீரோ,குக்கர்,
பெட்ஷீட்,மெத்தை தலகாணி விரிப்பு,எவர்சில்வர் சாமானங்கள்,திருமண வேஷ்டி சேலை,குர்ஆன், தொழுகை விரிப்பு கட்டில் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி இனாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் திமுக கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜமாத்தார்கள் அனைத்து மதச் சார்ந்த சான்றோர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் மேலும் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியது என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் 2000க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.