கோவை: மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் ஜோடிகளின் திருமணம் பதிவு செய்யப்பட்டது.
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வேடர் காலனி பகுதியில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களான 22 ஜோடிகளின் திருமணம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக மறுவாழ்வு முகாமிலிருந்து சார் பதிவாளர் அலுவலகம் வரை, இந்த ஜோடிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதி,
மேலும் அவர்களுக்கு சாப்பாடு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சார் பதிவாளர் ராமமூர்த்தி செய்து கொடுத்தார்.
இதனால் பதிவு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் மணம் நெகிழ்ந்தனர்.