கோவையில் தேச ஒற்றுமைக்காக நடைபெற்ற மாரத்தான்- மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

கோவை: கோவையில் தேச ஒற்றுமை மற்றும் முழங்கால் ஆரோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை VGM மருத்துவமனை, கோவை அத்லெடிக் கிளப் இணைந்து ” ரன் ஃபோர் நேசன் 2025″ என்று தலைப்பில், முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாரத்தான் போட்டியை நடத்தினர்.

Advertisement

கோவைநேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாரத்தானில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர் “கரூர் வைஸ்யா வங்கி, CRI பம்ப்ஸ், ஜாக்கார்ட், மார்ட்டின் குழும நிறுவனங்கள், SSVM குழும நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி குழும நிறுவனங்கள், SNS குழும நிறுவனங்கள், நேரு குழும நிறுவனங்கள், ரத்தினம் குழும நிறுவனங்கள், IT பூங்காக்கள், ரோட்டரி மாவட்டம் 3201, ரோட்டராக்ட் மாவட்டம் 3201.

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன், யங் இந்தியன்ஸ் கோவை, கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், லீடர்ஸ் டெஸ்க் மற்றும் யூத் ஃபவுண்டேஷன், ஆர்ய வைஸ்ய மகா சபா இளைஞர் பிரிவு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா இளைஞர் பிரிவு, பீனிக்ஸ் கிளப், யூனிப்ரோ, CDAA, வாசவி கிளப்புகள், சிட்ருனி மற்றும் முதியோர் இல்லங்கள்” போன்ற பெயர்களில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு கிளப்புகள் இந்த மாரத்தானில் பங்குபெற்றனர்.

இந்த ஆண்டு சுமார் 150 மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் அவர்கள் இருசக்கர நாற்காலி கொண்டு பங்குபெற்றனர்.

Recent News

கோவையில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுக்கு மேலாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி…

கோவை: அரசு வேலைவாய்ப்பிற்கு கடந்த 20 ஆண்டுகளாக போராடி பெற மாற்றுத் திறனாளி தனக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியை...

Video

Join WhatsApp