Header Top Ad
Header Top Ad

சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி; கோவையில் மூவர் குண்டர் சட்டத்தில் கைது!

கோவை: சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி வழக்கில் கோவையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). டீ மாஸ்டர். இவரை கடந்த மாதம் 24ம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ஒரு வாலிபர் ரூ. 5,150 மற்றும் செல்போனை பறித்து தப்பினார்.

இது குறித்து கண்ணன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பணம், செல்போன் பறித்தது போத்தனூர் மைல் கல் பாரதி நகரை சேர்ந்த ஷாரூக்கான் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போத்தனூர் போலீசார் போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்தனர்.

இதனையேற்று போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், வழிப்பறி வழக்கில் ஷாரூக்கானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Advertisement

போத்தனூர் போலீசார் கடந்த மாதம் 27ம் தேதி கஞ்சா வழக்கில் குறிச்சி சர்தார் சாய்பு வீதியை சேர்ந்த சையத் அலி (34) என்பவரை கைது செய்தனர்.

பின்னர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீசார் பரிந்துரையின் பேரில், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, சையத் அலி குண்டர் சட்டத்தில் கைதானார். அதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

கோவையை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, தேனி பெரியகுளம் கொம்பை பிள்ளை வீதியை சேர்ந்த சொக்கலிங்கம் (42), என்ற தொழிலாளியை கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து போலீசாரின் பரிந்துரையின் பேரில், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவுப்படி சொக்கலிங்கம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Recent News