கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக (செப் 12ல் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 96,98 வது வார்டுகளுக்கு பி.வி.ஜி திருமண மண்டபத்திலும், மத்திய மண்டலம், 62,63 வது வார்டுகளுக்கு மாநகராட்சி மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் 27,30 ஆகிய வார்டுகளுக்கு ஆனந்ததாஸ் மஹாலிலும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 10,12,17 ஆகிய வார்டுகளுக்கு கொங்கு வெள்ளாளர் திருமண மண்டபத்திலும்,
கோட்டூர் பேரூராட்சியில் 16,17,18,19,20,21 ஆகிய வார்டுகளுக்கு ஆழியாரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் மஹாலிலும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சிக்கு வடசித்தூரில் உள்ள திருமண மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.