கோவையில் போதை இளைஞர்கள் அட்டகாசம் – கார்கள் மீது மோதிய வீடியோ வெளியீடு!

கோவை: கோவையில் போதையில் இருவராக வந்த இளைஞர்கள், பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்கள் மீது கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் வடவள்ளியில் இருந்து கோவை மாநகருக்குள் செல்லும் லாலி சாலையில், போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதினர். சேதத்தை ஏற்படுத்திய பின்னரும் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை சக வாகன ஓட்டிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செல்போனில் பதிவு செய்த இந்த காட்சிகளை News Clouds Coimbatore வாசகர் ஹரிஹரன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் இப்படிப்பட்ட போதை ஆசாமிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவை மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இன்று (24.06.2026) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...