கணக்கே இல்லாமல் கட்டுக்கட்டாய் பணக்கட்டு; சிங்கநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு!

கோவை: கோவை, சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் வெள்ளலூர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

Advertisement

இதைத்தொடர்ந்து புகார்களை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் வந்த காவல் துறையினர்
இந்த தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அலுவலக வளாகத்தில் இருந்த இடைதரகர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இந்த பணம் எப்படி வந்தது ? என்பது குறித்தும், பணத்தை அங்கு போட்டவர் யார் ?என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட, நிலையில் தற்போது மீண்டும் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...