Header Top Ad
Header Top Ad

கோவையில் மெத்தாபேட்டமைன் வைத்திருந்த 3 பேர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருள் மெத்தாபேட்டமைன் கடத்திய மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஐந்து பேர் நின்று இருந்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் போதைப் பொருளான ஏழு கிராம் மெத்தாபேட்டமைன், குஷ் என்னும் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது கணபதியைச் சேர்ந்த அமர்நாத், மணிகாரம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், சக்தி முகேஷ், கோவில்மேட்டை சேர்ந்த தஷ்வந்த் என தெரிய வந்தது.

விற்பனைக்காக பெங்களூரில் இருந்து மெத்தாபேட்டமைன், குஷ் கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் இருந்த அஸ்வின் என்பவர் தப்பினார்.

Advertisement

கைதான அவர்களை சிறையில் அடைத்த காவல் துறையினர். ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான மெத்தாபேட்டமைன், குஷ் கஞ்சா பறிமுதல் செய்தனர். தப்பிய அஸ்வினை தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட அமர்நாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News