Header Top Ad
Header Top Ad

கோவை விமான நிலையத்தில் ஒரே நாளில் இத்தனை பொருட்கள் பறிமுதல்…

கோவை: கோவை விமான நிலையில் ஒரே நாளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், சார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 1256 லைட் சிகரெட்கள், 115 புனி சிகரெட்டுகள், 280 இ-சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டும் இன்றி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 13 லேப்டாப்புகள், 12 ட்ரோன் கேமராக்கள், 20 மைக்ரோபோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இதனை எடுத்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ், விக்னேஷ், பாண்டிச்சேரியை சேர்ந்த அப்துல் அஹமத் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி, அப்துல் காதர், திருச்சியை சேர்ந்த ஐயப்பன், கடலூர் பகுதியை சேர்ந்த பிரம்மா ஆகிய ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மொத்த மதிப்பு 45 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News