Header Top Ad
Header Top Ad

கோவையில் நயாகரா நீர்வீழ்ச்சியுடன் தொடங்கயது பொருட்காட்சி! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியில், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லேண்ட், படகு சவாரி மற்றும் கடல் தேவதைகளின் சாகசம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோவை மாநகரைப் பொறுத்தவரை பொழுதுபோக்கிற்கு பொதுமக்கள் மால்கள் மற்றும் திரையரங்குகளை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

அவ்வப்போது வஉசி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் பொருட்காட்சிகள் பொதுமக்களின் பெரும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை 40 நாட்களுக்கு வஉசி பூங்கா மைதானத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் விளையாடி மகிழும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லேண்ட், கடல் தேவதைகளின் சாகசம் ஆகியவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதே போல் 9d திகிலூட்டும் பேய் வீடு, பல்வேறு விதமான ராட்டினங்கள் ஆகியவையும், குழந்தைகள் விளையாடி மகிழ படகு சவாரி ஆகியவையும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன.

இவை பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி பொதுமக்கள் உண்டு மகிழ பானிபூரி, டெல்லி அப்பளம், ஐஸ்கிரீம், கூல் ட்ரிங்க்ஸ், மதுரை ஜிகர்தண்டா போன்ற 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனையகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையிலான பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

நேரம்

தினமும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Recent News