Header Top Ad
Header Top Ad

துவங்கிய புரட்டாசி மாதம்- கோவையில் மீன் விலை குறைந்தது

கோவை: புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து கோவையில் மீன் விலை குறைந்துள்ளது.

புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை எடுத்து பொதுமக்களில் பலர் விரதம் இருப்பதால் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். இதனால் இறைச்சி கடைகள் மீன் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட தற்பொழுது குறைந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை கணிசமாக குறைந்து உள்ளது. மீன் வாங்குவதற்கும் குறைவான மக்களே வருகை புரிகின்றனர் அவ்வாறு வரும் மக்கள் விலை குறைவாக இருப்பதால் அதிகமான மீன்களை வாங்கி செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிக அளவு வந்தாலும் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

குறிப்பாக கிலோ மத்தி 70 ரூபாய், அயிலை 80 ஆகிய பல்வேறு மீன்கள் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சரம் போன்ற மீன்கள் 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

புரட்டாசி மாதம் ஆரம்பித்ததால் ஒரு மாதம் வியாபாரம் மந்தமாக தான் இருக்கும் என்றும் மீன் வரத்து அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் அதிகமாக வர மாட்டார்கள் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent News