நவராத்திரி விழா; ஈஷா யோக மையத்தில் என்ன ஸ்பெஷல்; புகைப்படத் தொகுப்பு!

கோவை: கைவினைப் பொருட்களின் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம் குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

ஈஷாவில் நவராத்திரி விழா செப்.22 தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 9 நாட்களும் லிங்க பைரவி வளாகத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

Advertisement

சூர்ய குண்ட மண்டபத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியுடன் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈஷாவில் நவராத்திரி விழா திங்கள்கிழமை ப்ராஜக்ட் சம்ஸ்கிருதி கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (23/09/2025) ஆதியோகி ஆலயத்தில் சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம் நிகழ்ச்சியும் சவுண்டஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புதன்கிழமை( 24.09.2025) இந்துமதி மற்றும் அவரது குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, வியாழக்கிழமை (25.09.2025) பிரஜாக்தே சுக்ரே என்பவரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இன்று (26.09.2025) அம்பி சுப்பிரமணியத்தின் கர்நாடக வயலின் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை (27.09.2025) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியக் கலை நிகழ்ச்சியும், திங்கள்கிழமை (29.09.2025) மெகபூப் அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செவ்வாய்க்கிழமை (30.09.2025) ப்ராஜக்ட் சம்ஸ்கிருதியின் ‘மார்கம்’ என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஈஷா யோக மையத்தில், நவராத்திரியை முன்னிட்டு, சூர்ய குண்ட வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் தான் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம்.

சூர்ய குண்ட மண்டபத்துக்கு எதிரே “ஹேண்ட்ஸ் ஆப் கிரேஸ்” என்ற தலைப்பில் கைவினைப் பொருள்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், கைத்தறி நெசவு துணிவகைகளும், கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரியை முன்னிட்டு 9 நாள்களும் லிங்கபைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Recent News

பாரதியார் இருந்திருந்தால் அழுதிருப்பார்- பாஜகவை சாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்…

கோவை: பாரதி கூறியது மோடியின் தலைமையில் நடக்கிறதா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பால்பொருட்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை தமிழக பால்வளத்துறை...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp