Header Top Ad
Header Top Ad

கோவையில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NAM) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவையில் 13.10.2025 அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மத்திய மாநிலஅரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சிஅளிக்கப்பட்டு மத்தியஅரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும்.

தேசியதொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

Advertisement

தொழிற்பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை, தொழிற்பிரிவுகளுக்கு ஏற்பதொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்புதேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் NCVT மற்றும் SCVT தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோயம்புத்தூர்-29 அவர்களை 9566531310. 9486447178 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News