கோவை: வரும் வியாழக்கிழமை கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் உட்பட அனைத்துவிதமான மதுபானக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் / பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள்,
தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 02.10.2025 (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti )தினத்தன்று மூட (Dry day) உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்குமுரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.