Header Top Ad
Header Top Ad

கோவையில் அதிரடி தீர்ப்பு; சிறுமி வழக்கில் முதியவருக்கு சாகும் வரை சிறை!

கோவை: கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.

இதனால் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இதனிடையே கடந்த 2019ல் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் பாவா என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. இது குறித்த தாய் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறி சிறுமி அழுதார்.

மேலும் அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஷேக் பாபாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், ஷேக் பாவாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Recent News