Header Top Ad
Header Top Ad

இட்லி கடை தனுஷ் போலவே மாறிய கோவை ரசிகர்

கோவை: இட்லி கடை படம் பார்க்க அந்த கதாபாத்திரம் போலவே வந்த தீவிர ரசிகர்.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் படத்தை பார்ப்பதற்கு வருகை புரிகின்றனர்.

கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இட்லி கடை திரைப்படம் வெளியாகி உள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் பலரும் ஒரே மாதிரி இட்லி கடை திரைப்பட புகைப்படம் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து வந்து உற்சாக முழக்கத்துடன் படம் பார்க்க சென்றனர்.

அப்போது திரைப்படம் பார்க்க வந்த ஷியாம் என்ற தனுஷின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாபாத்திரம் போலவே வேஷ்டி சட்டை துண்டு அணிந்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு படத்தை காண்பதற்கு ஆர்வமுடன் வருகை புரிந்தார். அவரை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Advertisement

Recent News