Header Top Ad
Header Top Ad

ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம்- குழந்தைகளுடன் சென்று மகிழுங்கள்

கோவை: கோவை ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம் குழந்தைகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ப்ரோசோன் மாலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தும் டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுகள் ஆகியவை துவங்கியுள்ளன.

வருகின்ற இருபதாம் தேதி தீபாவளி பண்டிகை ஆனது கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சரவணம்பட்டி சாலையில் உள்ள ப்ரோசோன் மாலில் ஒளிநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இங்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று 35 லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளை கவரும் வண்ணம் தமிழ்நாட்டில் முதல்முறையாக ப்ரோசோன் டைனோசர் உலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காடு போன்ற அமைப்பில் அசையும் டைனோசர்கள், பெரிய அளவிலான டைனோசர் முட்டை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் உற்சாகமாக அதனை பார்த்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

Advertisement

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இளம் வயதினருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் ஷாப்பிங் நேரம் நீட்டிக்கப்பட்டு மேலும் அந்த இரண்டு தினங்களுக்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் இல்லை.

Recent News