கோவை: கோவையில் சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவ அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குநர், (Dispenser)சிகிச்சை உதவியாளர், (Therapeutic Assistanti)
பல்நோக்கு (Multipurpose Worker/Attender) (Data Assistant), ULB. UHN(ROTN) Accounts Assistant Assistant cum Accounts Officer, கணக்கு உதவியாளர் Assistant cum Data Entry Operatorதரவு உள்ளீட்டாளர் ஆகிய காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.
இது குறித்த விண்ணப்படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதன முகவரி https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 22.10.2025-அன்று மாலை 05.00 மணிக்குள் பந்தயசாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.