கோவை: Audi Car ஷோரூம் நிறுவனம் சார்பில், அவர்களது வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ட்டில் விருந்து வழங்கி மகிழ்வித்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள Audi Car ஷோரூம் நிறுவனம், ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு, வாளையாறு பகுதியில் உள்ள வின்னர்ஸ் ஹில் ரிசார்ட்டில் விழா சிறப்பாக நடைபெற்றது.
Advertisement

வின்னர்ஸ் ஹில் ரிசார்ட் நிறுவனத் தலைவர் சி.கே. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட Audi Car வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு, ரிசார்ட்டில் உள்ள சிறப்பம்சங்களை சி.கே. கண்ணன் விளக்கினார். பின்னர், அவர் ஜீப்பில் அழைத்து ஆஃப் ரோட் ரைடிங் அனுபவத்தையும் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,
"இயற்கை எழிலுடன் அமைந்த மலைப்பகுதி, குழந்தைகள் விளையாடக்கூடிய பகுதிகள், நவீன வசதிகளுடன் கூடிய அறைகள், ஹார்ஸ் ரைடிங், மேலும் சுமார் 1500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு சமைக்கும் பெரிய உணவுக்கூடம் என பல வசதிகள் இங்கு உள்ளன," என்றார்.
இந்த விழாவில் Audi Car ஷோரூம் ஜெனரல் மேனேஜர் விவேக், நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
