கோவை: கோவையில் இரவு நேரத்தில் மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது வனத்தை விட்டு விலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருகின்றன.
இதனிடையே மதுக்கரை-பாலக்காடு சாலையில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று திடீரென சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் சென்றது.

சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பு சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிடைந்தனர்.
பாம்பு சாலையைக் கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்திய பொதுமக்கள் அதனை வியந்து பார்த்தனர்.


