கோவையில் பரிதாபம்; தலைமுடியால் உயிரிழந்த பெண்!

கோவை: இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி ஆனந்த ஜோதி (50). இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக ஆனந்த ஜோதியின் தலைமுடி மரம் அறுக்கும் எந்திரத்தில் உள்ளே சிக்கி உள்ளது.

இதனால் மரம் அறுக்கும் எந்திரம் வேகமாக இழுத்ததில் அவரது தலையில் படுகாயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ஜோதியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Recent News

Video

Join WhatsApp