கோவையில் துக்கத்திற்கு சென்றவர் வீட்டில் கைவரிசை!

கோவை: உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜ் (59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாலக்காட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் மங்களூருக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். நேற்று ஸ்ரீராஜ் வீட்டில் பணிபுரிந்து வரும் கவிதா என்ற பெண் ஸ்ரீராஜூக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராஜ் உடனே அங்கிருந்து கோவை திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க காசுகள், தங்க மூக்குத்தி, மோதிரம், கம்மல், மற்றும் சில்வர் பொருட்கள், வெளிநாட்டு வாட்ச் மற்றும் ரூ.1,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து ஸ்ரீராஜ் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Advertisement

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அரசு பள்ளி பயின்று முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணாக்கர்கள்- நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…

கோவை: அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணாக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைத்து பாராட்டினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில்...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...