ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார்.

கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தே பயணித்தார்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு NDA கூட்டணி சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில் கோவையில் மாலை மழை பெய்த சூழலில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த அண்ணாமலை GD பாலத்தில் நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். அப்போது காரில் இருந்து சிறிது தூரம் இறங்கி மேம்பாலத்தில் நடந்து பிறகு ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறினார்.

இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தேர்தல் நடத்தை விதிகள்- திருமண மண்டபங்கள், அச்சகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த ஆட்சியர்…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் அச்சகங்கள் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை கட்டிட தொழிலாளியை விரட்டிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.