ஆயுதபூஜை தொடர் விடுமுறை- கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள்…

கோவை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவையிலிருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆயுதபூஜை வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து 120 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

ஆயுதபூஜையை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, கோவை மண்டலத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 120 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவையிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் வரும் 16-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விடுமுறை காலத்தில் பயணிகள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...