ஜனவரி முதல் வாரம் வரை பொறுமையாக இருங்கள், அத்தனையும் தெரியும்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: ஜனவரி முதல் வாரத்தில் அத்தனையும் தெரியும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மண்ட ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்று திரும்பியுள்ளார்.

மலேசியாவில் இருந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மலேசியாவே வியந்து போகும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி உலக நாடுகள் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு இருந்துள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை பிரதமர்கள் குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ மேற்கொள்வார்கள் ஆனால் தற்பொழுது விஜய்க்கு ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் வரலாற்று நாயகனாக தமிழ்நாட்டில் பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றார்.

எதிர்கால தமிழகத்தை ஆளுவதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் அத்தனை பேரும் ஒருமனதாக குரல் கொடுத்து கொண்டிருக்கும் காட்சிகளை நாம் காண்கிறோம் என்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்கின்ற பொழுது ஆர்ப்பரித்து வருகின்ற கூட்டம் அலைமோதுகின்ற கூட்டம் 1972 இல் எம்ஜிஆர் யிடம் பார்த்ததைப் போல 1998 ஜெயலலிதாவிடம் பார்த்தை போல இன்று ஒரு மாற்றம் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றம் எதிர்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் அமருவதை மக்கள் சக்தியுடன் இணைந்து அந்த பணிகள் நிறைவேறும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைவது போன்ற கருத்துக்கள் பரவி வருகிறது இதுவரை என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த அவர் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் குறித்து திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுகிறார்கள் நாங்கள் கூற வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்த சீமான் அங்கு விருந்து அருந்தி விட்டு பரிசு பொருட்களை வாங்கி வந்த காலம் உள்ளது அதனை மறைந்துவிட கூடாது என்றார்.

மீனவர்கள் பிரச்சனை குறித்தான கேள்விக்கு, மக்கள் கோரிக்கை வைக்கும் போது அதனை ஆராய்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றார். எங்களை பொறுத்தவரை விஜயை முதல்வராக ஏற்று கொள்கின்றவர்கள் தான் கூட்டணியில் இணைய முடியும் என்றார்.

திருமாவளவன் கூறும் கருத்து வேறு என்று கூறிய அவர் அவருடைய கருத்தை வாஜ்பாயுடன் திமுக கூட்டணியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்று திருமாவளவன் தான் கூற வேண்டும் என்றார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பொறுத்திருங்கள் ஜனவரி முதல் வாரத்திற்கு அத்தனையும் தெரியும் என்றார். எங்களை பொறுத்தவரை ஈரோட்டில் பேசும் பொது கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் அவரே மக்களிடம் கேட்டார் அதற்கு மக்களும் பதில் அளித்தார்கள் என்று கூறிய அவர், மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார் என தெரிவித்து சென்றார்.

Recent News

Video

Join WhatsApp