Header Top Ad
Header Top Ad

மலைவாழ் மாணவிகளுக்கு மிதிவண்டி, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்- IJK கட்சி தீபாவளி கொண்டாட்டம்

கோவை: மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் புத்தாடைகள் வழங்கி இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பாக தீபாவளி பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் இணைப் பொதுசெயலாளரும், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான லீமாரோஸ் மார்ட்டின் தலைமை தாங்கி திபாவளி பண்டிகை நலத்திட்டங்களை வழங்கினார்.
இதில் நூறு மகளிருக்கு தையல் இயந்திரங்களும், 50 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள்களும், மலைவாழ் மக்களுக்கு தீபாவளி புத்தாடைகளும், மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கப்பட்டன.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய அவர்,
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியோர்களையும் அழைத்து வருவதை கட்சியினர் தவிர்த்து கொள்ள வேண்டும் என கூறிய அவர், மேலும் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். அரசும், காவல்துறையும் கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணியினரின் மலைவாழ் மக்களுடன் இணைந்து கோலாட்டமும், கும்மியாட்டமும் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Recent News