கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 16 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல், வந்துள்ளதால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்து செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு பொருளும் கைப்பற்ற படாத நிலையில் அது புரளி என்பது தெரிய வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் இங்கு செயல்பட்டு வரும் ஒவ்வொரு துறை அலுவலகங்கள், கூட்டரங்குகள், உணவு அருந்தும் இடம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்களிடம் ஏதேனும் வித்தியாசமான பொருள் காணப்பட்டதா என்றும் கேட்டறிந்து சோதனை நடத்தினர்.

Advertisement

விரைந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...