சிறுவாணி அணையில் தொடரும் கனமழை! 30 அடியை கடந்த நீர்மட்டம் – கோவை குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 30.63 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கோவை மாநகரப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிறுவாணி அணை மற்றும் சுற்றுவட்டார நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று (21.09.2026) நிலவரப்படி, சிறுவாணி அடிவாரப் பகுதியில் 92 மி.மீ. மழையும், அணைப் பகுதியில் 89 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 872.74 மீட்டராக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 878.50 மீட்டராகும்.

Also Read: கோவையில் 19 ஆண்டுகளாக தொடரும் ரத்ததான முகாம்! ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

Advertisement

தற்போதைய நீர் ஆழம் 30.63 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு உயரம் 49.53 அடியாக இருக்கும் நிலையில், தற்போது பயன்பாட்டு நீர் சேமிப்பு 303.38 மில்லியன் கனஅடியாக (M.C.Ft) உள்ளது.

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை கேரள மாநில அணைகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் (DSO) உத்தரவின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க கேரள அரசு அனுமதித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை மாநகராட்சி மற்றும் வழியோரக் குடியிருப்புகளுக்கான குடிநீர் விநியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1000 மி.மீ., 500 மி.மீ. மற்றும் 450 மி.மீ. விட்டம் கொண்ட முதன்மைக் குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 101.40 MLD அளவில் இருந்து இன்று 49.00 MLD குடிநீர் கோவை நகரின் விநியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

சிறுவாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் கோவை நகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவுக்கு நீர் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...