மருதமலையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த கார்- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: மருதமலையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

​கோவை, மருதமலை அடிவாரத்தில் வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்த 50 வயது மூதாட்டி சாந்தியின் பெட்டிக்கடை, நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தன்யா, தனது காதலனுடன் காரில் கோவிலுக்குச் சென்ற போது, வேகம் அத்துமீறியது. கட்டுப்பாட்டை இழந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் சாந்தியின் கடைக்குள் புகுந்து அவர் மீது மோதியது.

இந்த விபத்தின் காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி காண்போரை உறைய வைத்து உள்ளது.

Advertisement

விபத்து நடந்த இடத்தில் கிடந்த மூதாட்டியைப் பார்த்துப் பதறிய பொதுமக்கள் முன், “நான் தான் தவறு செய்து விட்டேன், மொத்தச் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தன்யா வாக்குறுதி அளித்ததை அடுத்து, சாந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​விபத்து குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த போது, அந்த இளம்பெண் மீண்டும் மருத்துவ செலவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி உள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் சாந்தியின் நெஞ்செலும்பு உடைந்து உள்ள நிலையில், ‘ஐசியூ’ (ICU) சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்தவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்- அண்ணாமலை பரப்புரை…

கோவை: பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்த திமுகவையும் காங்கிரஸையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு,...

Video