புற்றுநோய் நோயாளிகளுக்கு நம்பிக்கை – PSG புதிய மையம்

கோவை: கோவை PSG மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் லிம்பிடிமா நோயாளிகளுக்காக மேம்பட்ட சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

Advertisement

கோவை PSG மருத்துவமனையில் மேம்பட்ட லிம்பிடிமா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகள் மற்றும் லிம்பிடிமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

PSG Hospitals உடன் இணைந்த PSG Institute of Oncology மற்றும் Physical Medicine & Rehabilitation (PMR) துறை இணைந்து, “PSG Advanced Lymphedema Care Clinic” மையத்தை ஏப்ரல் 18, 2026 அன்று தொடங்கினர்.

psg advanced lymphedema clinic

தொடக்க விழாவை தொடர்ந்து “Lymphedema: Prevention and Management Protocols” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.

Advertisement

இதில் ICMR-NIVCR அமைப்பை சேர்ந்த உடற்தெராபி நிபுணர் நிலேஷ்குமார் இளங்கோவன் கலந்து கொண்டு, லிம்பிடிமா நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்த பயிற்சியில் மருத்துவர்கள், உடற்தெராபி நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Advertisement

இந்த புதிய மையத்தின் மூலம், மேம்பட்ட சிகிச்சை மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் தனது உறுதியை PSG மருத்துவமனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...