கோவை: கோவையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், CARS327 நிறுவனம் சார்பில் யூஸ்டு கார்கள் விற்பனை மாநாடு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9-ம் தேதி தொடங்கிய இந்த விற்பனைத் திருவிழா, அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை பட்டணம் பகுதியில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள CARS327 வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு வகையான கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற கார்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள், உறுதியளிக்கப்பட்ட பரிசுகள் (Assured Gifts) மற்றும் சிறப்பு சர்வீஸ் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பத்துடன் நேரில் வந்து கார்களைப் பார்வையிட்டு, அவற்றின் விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்குப் பொருத்தமான காரைத் தேர்வு செய்ய இந்த மாநாடு உதவும் என CARS327 நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு 86819 66699, 89404 66699, 84287 66699 அல்லது 89407 66699 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.






