கோவை கணுவாயில் பேருந்தை பின்னோக்கி இயக்கியதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை சேதமடைந்த சம்பவத்தில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
1998 கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத ஊதியத்தை ₹57,700 ஆக உயர்த்துதல், 12 மாத சம்பளம் வழங்குதல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூளை வளர்ச்சி குன்றிய மகனை தினமும் போராட்டத்திற்கு அழைத்து வந்து கவனித்து வரும் தாயின் நிலை காண்போரைக் கண்கலங்க செய்துள்ளது.
கோவை உக்கடம் ஜிஎம் நகரில் செயல்படும் குழந்தைகள் நல குழு (CWC) அலுவலகத்தில் சுகாதாரமற்ற கழிப்பறை, குடிநீர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் உடனடி நடவடிக்கை கோரியுள்ளனர்.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சியின் குரலை நெரிக்கும் வகையில் செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற மோடி முகாமில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி கலகலத்து விட்டதாகவும் தமிழகத்தில் திமுகவை அகற்றுவதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டி உரையாற்றினார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் 32வது மகா சிவராத்திரி விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.