தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 182 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8500 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழக மானிய குழு மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாத ஊதியத்தை 57,700 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் மேலும் அதனை 12 மாதத்திற்கும் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதேசமயம் பணி நிரந்தரம் உயிரிழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு இழப்பீடு ஆகியவற்றையும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

தற்பொழுது வரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றாத நிலையில் தமிழகம் முழுவதும் விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...