போராட்டத்திலும் பாச போராட்டம்- கோவையில் கண்கலங்க வைக்கும் நெகிழ்வு- செவி சாய்க்குமா அரசு…

கோவை: மூளை வளர்ச்சி குன்றிய மகனை போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்து கொள்ளும் தாயின் பாசம் கண்கலங்க செய்துள்ளது.

Advertisement

வேறு வழியின்றி மூளை வளர்ச்சி குன்றிய மகனை நாள்தோறும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்ளும் சத்துணவு ஊழிய தாயாரின் போராட்டம் கண்போரை கண் கலங்க செய்துள்ளது.

காலம் முறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அகவிலை படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே பத்தாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்திற்கு வரும் சில அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் சிலர் வேறு வழியின்றி அவர்களது குழந்தைகளை வேறு வழியின்றி அழைத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தனலட்சுமி என்ற அங்கன்வாடி பணியாளர் மூளை வளர்ச்சி குன்றிய அவரது மகனை வேறு வழியின்றி நாள்தோறும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்கிறார்.

இந்தப் போராட்டம் தொடர்வதால் மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை எனவும் பயண அலைச்சல் வெயிலின் தாக்கம் ஆகியவை கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட தனலட்சுமி அரசு விரைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

Advertisement

நாள்தோறும் காலை மற்றும் மதிய வேளையில் அதிக வெயிலையும் பொருட்படுத்தாமல் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராடி வரும் நிலையில் வேறு வழியின்றி இது போன்று குழந்தைகளையும் அழைத்து வந்து சிரமங்களுடன் பார்த்துக் கொள்வது காண்போரை கண்கலங்க செய்கிறது.

எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்த காட்சிகளை காணும் பொதுமக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...