கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மொபைல் கடையின் ஷட்டரை உடைத்து 20 செல்போன்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட அனைத்து செல்போன்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவையில் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு நினைவாக, நாளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 2,000 போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணுவாயில் பேருந்தை பின்னோக்கி இயக்கியதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை சேதமடைந்த சம்பவத்தில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
1998 கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.