கோவை குண்டுவெடிப்பு தினம்- வெடிகுண்டு போலிசார் தீவிர சோதனை…

கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவர்

அதேசமயம் அதற்கு முந்தைய தினம் வருடம் தோறும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளுவர்.

Advertisement

அதன்படி நாளை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டு ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆர் எஸ் புரம் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...