திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரட்டும்… குடும்பஸ்தனா நடந்துக்கணும்… விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

சென்னை: விஜய் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் குடும்பஸ்தனாக அரசியல் செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக அதிமுக என இருபெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைக் காட்டிலும், தவெக.,வின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறப்போகின்றன என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், விஜய் வீட்டில் இருந்தே அரசியல் செய்வதாகவும், களத்திற்கு வருவதில்லை என்றும் அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், அவருடன் கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராதது விஜய் மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்துள்ளன. அது மட்டுமின்றி திரிஷா மற்றும் விஜயை இணைத்து பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
vijay trisha

அவ்வப்போது பிரச்சாரங்களில் பேசும் விஜய் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். முதலில் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்துவிட்டு, அதிமுக.வை விமர்சிக்காமல் இருந்து வந்த விஜய் தற்போது, அதிமுக.வையும் விமர்சித்து வருகிறார்.

பாஜக மீது விஜய் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், பாஜக நிர்வாகிகளும் விஜயை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

அந்த வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது:-

விஜய் அனுபவமே இல்லாதவர். விஜய் வீட்டிலிருந்து முதலில் வெளியே வரவேண்டும். குறிப்பாக திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். குடும்பத்துடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டும்.

nainar nagendran about vijay

நல்ல தலைவர்கள் வழி நடத்தும் இயக்கம் குறித்து, நல்ல முறையில் பேச வேண்டும். அவர் வீட்டில் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாம் முடியும். களத்தில் கவுன்சிலர் கூட இல்லாதவர் அவர். கூரை ஏறி கோழி கூட பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

இதுதான் விஜய்க்கு பதில். விஜய் முதலில் ஒரு குடும்பஸ்தனாக இருந்து கட்சி நடத்தட்டும். அவர் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது. விஜயகாந்துக்குக் கூட கூடாத கூட்டமா விஜய்க்கு கூடிவிட்டது? கூட்டம் இருந்தால் என்ன? எல்லாம் ஓட்டாக மாறுமா? நானும் ஆஞ்சநேயர் போல் இந்த மலையைத் தாண்டுவேன் என்று சொல்ல முடியும், ஆனால் அது நடக்குமா? விஜயால் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது.

என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.



Amazon Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...