கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசாங்கமே ஏற்று நடத்தி அதில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும்,

தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களை குறிப்பிட்ட தேதியில் சரியாக வழங்க வேண்டும், பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தால் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் அதேசமயம் நிர்வாக காப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தீபாவளி ஊக்க தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு 108 அவசர உறுதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பேரவை செயற்குழு உறுப்பினர் இருளாண்டி,நாங்கள் கொரோனா காலங்கள், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள், பண்டிகை காலங்கள் என அயராது உழைத்ததாகவும் எங்களது நியாயமான கோரிக்கைகளை தான் தற்போது வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆகியோர்களுக்கு எல்லாம் முதலமைச்சர் அவர்களது நலனுக்காக அறிக்கைகள் வெளிவிடும் நிலையில் தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்து முதல்வரின் இல்லத்தை நோக்கி கோரிக்கை நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.